Header Ads Widget

Responsive Advertisement

1.4 லட்ச கோடி NPA 4900 CASE சிக்கலில் Central Bank of India

வங்கிகளில் பொதுவாக வரக்கூடிய பிரச்சனை வராக்கடன் தான் இது அவ்வப்போது பல வங்கிகளில் ஏற்படும் சில நேரங்களில் இது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை இப்போது இதில் நாம் காணப்போகும் வங்கியில் வாரக்கடன் பற்றி விவரிக்க போகிறோம்.

Central Bank of India என்ற பொதுத்துறை வங்கி வழங்கிய கடனில் சுமார் 1.44 லட்ச கோடி ரூபாய் வாரக்கடன் ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இந்த கடனை வசூலிக்க வங்கி கிட்டத்தட்ட 4903 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் பெரும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாகும்.

இந்த கடனை வசூலிக்க பல சட்ட வழிமுறைகளை வங்கி பயன்படுத்தி திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. இதில் பெரும் நிறுவங்களின் சொத்துக்களை விற்பனை செய்தும், அடமானம் வைத்த சொத்துக்களை கைப்பற்றியும், மற்ற சில வழிமுறைகளை பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

பல பெரும் நிறுவனங்கள் இந்த வங்கியிடம் கடன் வாங்கி உள்ளது அதில் பெரும் அளவில் கடனை பெற்ற சில நிறுவனங்கள் videocon, அணில் அம்பானியின் reliance போன்றவை முக்கிய நிறுவனங்கள் மொத்த நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விரிவாக பாருங்கள்.


NPA (வாரக்கடன்)

தற்போது இந்த வாரக்கடனால் வங்கிக்கு ஏற்படும் விளைவுகளை பார்ப்போம் ஏனெனில் வங்கிகளில் இது எவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் NPA பற்றிய புரிதலும் உங்களுக்கு ஏற்படும்.

முதலில் NPA வாரக்கடன் என்பது ஒரு வங்கியில் வாங்கிய கடனின் அசல் தொகை அல்லது வட்டி 90 நாட்களுக்கு மேல் திருப்பி செலுத்த வில்லை என்றால் அத்தகைய கடனை வாரக்கடன் என்று வங்கி அறிவிக்கும். 

வங்கிக்கு மிகமுக்கிய வருவாய் கிடைக்கும் இடமே கடனுக்கான வட்டி தான் (interest income) நாம் காலாண்டு முடிவுகளில் இதை பற்றி விவரித்துள்ளோம். இது தடைப்பட்டால் வங்கியின் வருமானம் பெரும் அளவில் பாதிக்கப்படும்.

இந்த வாரக்கடனை சமாளிக்க வங்கி தனது லாபத்தில் இருந்து ஒரு பங்கை provision செய்ய வேண்டும் இதனால் புதிய கடன்களை போதிய அளவில் வழங்க முடியாத நிதிநிலை ஏற்படும் இதனால் வளர்ச்சி பாதிக்கப்படும்.

மேலும் பங்குச்சந்தையில் நற்பெயர் கெடுக்கப்படும் இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்ப்படுத்தும்.

தற்போது பல சிறிய முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை book value அடிப்படையில் வாங்குவதை வழக்கமா கொண்டுள்ளார்கள். இந்த book value வாரக்கடனால் பாதிக்கப்படும். 

எவ்வாறு இது நடக்கும் உதாரணத்துடன் பார்ப்போம் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வாரக்கடன் ஏற்பட்டால் தனது லாபத்தில் ஒரு பங்கை provisioning (நிதி ஒதுக்கீடு) செய்வார்கள் இதனால் லாபம் குறையும் லாபம் குறைந்தால் ரிசர்வ் குறையும் இந்த ரிசர்வ் தான் வங்கியின் நிகர மதிப்பின் முக்கிய பகுதியாகும்.

மொத்த சொத்துகளில் இந்த NPA வருமானம் தராத சொத்துக்கள் இவை வருங்காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டால் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் book value மற்றும் NET Asset குறைக்கப்படும் இதனால் மதிப்பீடு மாற்றம் அடையும் என்பதையும் மனதில் வைத்து கொள்வது முதலீட்டாளர்களுக்கு நல்லது.




Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoption பொறுப்பேற்காது.

Post a Comment

44 Comments

  1. 🎉🎉
    Waiting for L&T article bro.

    ReplyDelete
  2. Yes bro. Correct. One small request bro. Banking sectors aa analysis panum bothu ena ena pakanum nu, ipo example ku NPA pathi sonninga la. Antha mathiri further aa intha mathiri explain panunga bro, artical la.

    Romba useful aa iruku. Thanks bro.

    ReplyDelete
  3. Thanks for your information bro

    ReplyDelete
  4. Bro this reminds me on gounder senthil comedy. Gounder who ate 2 idly wont get proper attention, but senthil who orders a lot in hotel will get good reception.

    ReplyDelete
  5. Very nice explanation. Easy to understand.

    ReplyDelete
  6. Useful information regarding concern bank cautious approach to investment in particular bank stock thank you 🙏🏼

    ReplyDelete
  7. அழகான சுருக்கமான விளக்கம்.உங்களுடைய ஆலோசனைப்படி federal வங்கிbookvalue 2ஐ தாண்டியவுடன் விற்று நட்டத்திலிருந்து தப்பினேன்.. நன்றி. தம்பி.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து வெளியிடுங்கள் நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. One source ஒரு வாரமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன் நன்றி

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Bro enna bro soldrenga. As per sept 25 Balance sheet shows around 3L crore as L&A. Out of this 1.4L cr NPA means its very huge...Thankyou for this update...

    ReplyDelete
  12. Thank you very much for guiding us to be professional investors, Explain with example how to identify the opportunity that is started in the stock.

    ReplyDelete
  13. Clearly explained the issue. Thank you. Please update your daily updates in Telegram also, like your video link

    ReplyDelete
  14. நல்ல கட்டுரை நன்றி.

    ReplyDelete
  15. Nice work and website looks good bro.. Article helpful and informative to us.. Keep it up, thank you so much.. 🙏

    ReplyDelete
  16. Very clear explanation about book value & easy to understand brother ❤️

    ReplyDelete
  17. Public sector bankla intha NPA onnme panna mudiyathu bro ithe HDFC,Axis mari bankla iruntha avanga recovery agency ta kuduthu 3 months thanduna odane velaya start panniruvanga. Antha mari yappa public sector banks marutho apo tha ithukalam vidivu kalam

    ReplyDelete
  18. Useful information for value investors thanks bro

    ReplyDelete
  19. Good informative article and the website update is also very nice

    ReplyDelete
  20. Very good information about Central Bank. Thank you.

    ReplyDelete
  21. noted your contents., hope most of them seen this article and aware about this bank - Thank you for your efforts,

    ReplyDelete